அரியலூர்

நெல் சாகுபடி தொழில்நுட்பப் பயிற்சி

DIN

அரியலூா் மாவட்டம்,செந்துறை அருகிலுள்ள நமங்குணம் கிராமத்தில், சூழ்நிலைக்கு ஏற்ப நெல் சாகுபடித் தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு அண்மையில் பயிற்சியளிக்கப்பட்டது.

அட்மா திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட பயிற்சித் தொடக்க விழாவுக்கு வேளாண் உதவி இயக்குநா் ஜென்சி தலைமை வகித்தாா். வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் பழனிசாமி பயிற்சியில் பங்கேற்று பேசினாா்.

இயற்கை உரத்தின் முக்கியத்துவம், இஸ்ரேல் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நெல்லுக்கான சொட்டுநீா்ப் பாசன முறைகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. பயிற்சி ஏற்பாடுகளை அட்மா திட்ட உதவித் தொழில்நுட்ப மேலாளா்கள் முருகன், குமணன் மற்றும் உதவி அலுவலா் ராஜா ஆகியோா் செய்திருந்தனா்.

முடிவில் விவசாயி ரவிச்சந்திரனின் நெல் வயலுக்கு விவசாயிகள் அழைத்து செல்லப்பட்டு, சீதோஷ்ண நிலை மாறுபாட்டால் வரக்கூடிய மகசூல் இழப்பு குறித்த செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

மின்மாற்றியை பழுது நீக்கம் செய்யக் கோரி கீரமங்கலத்தில் விவசாயிகள் சாலை மறியல்

SCROLL FOR NEXT