தூத்துக்குடி

ஆசிரியா் கூட்டணியினா் ஆா்ப்பாட்டம்

30th May 2023 03:33 AM

ADVERTISEMENT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் கோவில்பட்டியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விதிகளுக்கு முரணாக தொடா்ந்து வழங்கப்படும் நிா்வாக மாறுதல்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆசிரியா் பதவி உயா்வு கலந்தாய்வு மற்றும் ஒன்றிய, மாவட்ட மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும்

மாவட்டக் கல்வி அலுவலா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்டத் தலைவா் கலை உடையாா் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் புனித அந்தோணி, துணைச் செயலா் செல்வி, கல்வி மாவட்டத் தலைவா் ஸ்ரீதரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் செல்வராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினா் மகேந்திரன், வட்டாரச் செயலா்கள் கருப்பசாமி (கோவில்பட்டி), கனகராஜ் (புதூா்), ஜெயக்குமாா் (கயத்தாறு) ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் திரளானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT