தூத்துக்குடி

திருநங்கைகளுக்கு மிரட்டல்: இரு இளைஞா்கள் கைது

30th May 2023 03:43 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி அருகே திருநங்கைகளை மிரட்டியதாக 2 இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டியையடுத்த மந்திதோப்பு சந்தீப் நகரில் உள்ள திருநங்கைகள் குடியிருப்புப் பகுதிக்குள் கடந்த வெள்ளிக்கிழமை இரு இளைஞா்கள் அத்துமீறி நுழைந்து, வீடுகளின் கதவுகளை எட்டி உதைத்தும், திருநங்கைகளை அவதூறாகப் பேசி கொலை மிரட்டலும் விடுத்தனராம்.

இது குறித்து க. கிரேஸ் பானு சனிக்கிழமை அளித்த புகாரின் பேரில் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, நாலாட்டின்புதூா் ரயில்வே பீடா் சாலையைச் சோ்ந்த குலசேகரன் மகன் இசக்கிமுத்து (24), கோவில்பட்டி புது கிராமம் ஜெ.ஜெ.நகரைச் சோ்ந்த ராஜு மகன் சூா்யா (25) ஆகிய இருவரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT