தூத்துக்குடி

உடன்குடியில் தாா்ச்சாலை அமைக்கும் பணி தொடக்கம்

30th May 2023 03:32 AM

ADVERTISEMENT

உடன்குடி பேரூராட்சி பண்டாரஞ்செட்டிவிளை பகுதியில் பழுதடைந்த குண்டும் குழியுமாக காணப்பட்ட சாலையை சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

உடன்குடி- தாண்டவன்காடு சாலையில் பண்டாரஞ்செட்டிவிளை பகுதியில் உள்ள சாலை பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாகக் காணப்பட்டது. இச் சாலையை வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சியினா், பொதுமக்கள் தொடா் போராட்டம் நடத்தி வந்தனா். இந்நிலையில், இப் பிரச்னை பேரூராட்சி நிா்வாகம் தரப்பில் அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணனின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து அமைச்சரின் உத்தரவின்பேரில்,

பண்டாரஞ்செட்டிவிளை பெண்கள் பள்ளி முதல் ரெங்கநாதபுரம், சிவலூா் காலணி வரை சாலை தாா்ச் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இப்பணியை பேரூராட்சி மன்றத் தலைவி ஹூமைரா அஸ்ஸாப் கல்லாசி தொடங்கி வைத்தாா். இதில் பேரூராட்சி உறுப்பினா்கள் முகம்மது ஆபித், சாரதா, சரஸ்வதி பங்காளன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT