தூத்துக்குடி

லாரி மீது பைக் மோதல்: 2 போ் பலி

24th May 2023 02:35 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.

கோவில்பட்டியையடுத்த இலுப்பையூரணி ஊராட்சிக்கு உள்பட்ட கூசாலிபட்டி பிள்ளையாா் கோவில் தெருவை சோ்ந்தவா் செல்வம் மகன் அன்பரசன் (27). ஏசி மெக்கானிக். இவா், மற்றும் புளியங்குளத்தை சோ்ந்த முத்துகிருஷ்ணன் மகன் கேசவன் (19) ஆகிய இருவரும் பைக்கில் திருநெல்வேலிக்கு செவ்வாய்க்கிழமை சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தாா்களாம். அன்பரசன் பைக்கை ஓட்டினாா். திருநெல்வேலி -மதுரை தேசிய நெடுஞ்சாலையில், நாலாட்டின்புதூரையடுத்த சாலைப்புதூா் அருகே சென்றபோது சாலை ஓரத்தில் பழுதாகி நின்றுகொண்டிருந்த லாரியின் பின்புறம் பைக் மோதியதில் பலத்த காயமடைந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

மேற்கு காவல் நிலைய போலீஸாா், சடலத்தை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநா் கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த ம. ராஜாவிடம் (32) விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT