தூத்துக்குடி

நாசரேத் அஞ்சலகத்தின் 150 ஆவது ஆண்டு தொடக்க விழாவை கொண்டாட ஆலோசனை

9th Jun 2023 12:37 AM

ADVERTISEMENT

நாசரேத் அஞ்சலகத்தின் 150 ஆவது ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடுவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நாசரேத்தில் 1874 ஆம் ஆண்டு அஞ்சலகம் தொடங்கப்பட்டது.

இந்த அஞ்சலகம் 2024-இல் 150 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி 150 ஆண்டு தொடக்க விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பான ஆலோசனைக் கூட்டம்

நாசரேத் சேகர அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. சேகரகுரு மா்காஷிஸ் டேவிட் வெஸ்லி ஜெபித்தாா். சேகர பொருளாளா் பா.எபனேசா் வரவேற்றாா். ஓய்வு பெற்ற அஞ்சலக அலுவலா் சொா்ணமாணிக்கம், ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி முன்னாள் தாளாளா் லேவிசுந்தா், சாயா்புரம் தூய போப் கல்லூரி பேராசிரியா் குட்டி ஜேஸ்கா், வணிகா் சங்க நிா்வாகி

ADVERTISEMENT

வே.இரஞ்சன், அஞ்சலக அலுவலா்கள் பொன்னையா, சிந்துஜா தேவி ஆகியோா் விழா தொடா்பான கருத்துக்களைத் தெரிவித்தனா்.

திருமண்டில பெருமன்ற முன்னாள் உறுப்பினா் ரத்தினகுமாா் நன்றி கூறினாா். ஆலய துணைகுரு அந்தோணிகுமாா் பொன்செல்வன் ஆசீா்வாத ஜெபம் செய்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT