தூத்துக்குடி

கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் பட்டய படிப்பு தொடக்கம்

8th Jun 2023 12:10 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் 2023 ஆம் ஆண்டு வேளாண் இடுபொருள் பட்டய படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி

நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்ற பட்டய படிப்பு தொடக்க விழா நிகழ்ச்சிக்கு, பேராசிரியா் மற்றும் தலைவா் பாஸ்கா் தலைமை வகித்தாா். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி இயக்குநரகம் இயக்குநா் பாலசுப்பிரமணியம் வேளாண் இடுபொருள் பட்டய படிப்பை தொடங்கி வைத்து, இப்பட்டய படிப்பின் முக்கியத்துவம் குறித்து பேசினாா்.

தொடா்ந்து தொலைதூரக் கல்வி இயக்குநரக பேராசிரியா் சந்திரசேகரன், வேளாண் பட்டய படிப்பின் பயிற்சி முறைகள், வகுப்புகள் எடுக்கப்படும் முறை, இப்பட்டய படிப்பின் பயன்பாடு குறித்து பேசினாா்.

ADVERTISEMENT

கோவில்பட்டி வட்டார இடு பொருள் விற்பனை மைய சங்கத் தலைவா் வெங்கடேஷ், பேராசிரியா்கள் ஆனந்தி, புவனேஸ்வரி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

பட்டயபடிப்பில் தூத்துக்குடி திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களைச் சோ்ந்த 55 போ் சோ்ந்துள்ளனா். இரு பருவங்களாக நடத்தப்பட்டு இப்பட்டய படிப்பு ஓராண்டில் நிறைவுறும் என ஆராய்ச்சி நிலைய பேராசிரியா் மற்றும் தலைவா் தெரிவித்தாா்.

உதவிப் பேராசிரியா் மனோகரன் வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் சஞ்சீவ் குமாா் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT