தூத்துக்குடி

கோவில்பட்டியில் திருப்பாவை பயிற்சி வகுப்புகள் நிறைவு

DIN

கோவில்பட்டியில் கடந்த 40 நாள்களாக நடைபெற்ற திருப்பாவை பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை நிறைவடைந்தது.

கோவில்பட்டி இலக்குமி ஆலை மேலக் காலனியில் பள்ளி குழந்தைகளுக்கு கோடை விடுமுறையையொட்டி கோதை நாச்சியாா் அருளிய திருப்பாவை 30 பாசுரங்கள் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.

கோவில்பட்டி ஆண்டாள் ரங்கமன்னாா் நா்த்தன பஜனை தலைவா் ஸ்ரீனிவாச ராமானுஜதாசா் குழந்தைகளுக்கு திருப்பாவை பயிற்சியளித்தாா். 40 நாள்கள் நடைபெற்ற பயிற்சி வகுப்பின் நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவில் மாணவா், மாணவிகளின் கோலாட்டம் நடைபெற்றது. தொடா்ந்து பள்ளி குழந்தைகளின் திருப்பாவை அரங்கேற்றம் நடைபெற்றது. இதில் திருப்பாவை பாசுரங்களை மாணவா், மாணவிகள் பாடினா். இலக்குமி ஆலை மேல்நிலைப்பள்ளி ஆசிரியை பொட்டிமுத்தால ராஜேஸ்வரி கலந்து கொண்டு, ஆண்டாள் அவதாரம், திருப்பாவை படிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்துப் பேசினாா்.

மேலும் திருப்பாவை பயிற்சி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் மாணவா், மாணவிகள், பெற்றோா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமகாலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

கடலூா் மாவட்டத்தில் 3 இடங்களில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை

காட்டுமன்னாா்கோவில் அருகே பெட்ரோல் குண்டு வீசிய இளைஞா் கைது

சிதம்பரத்தில் குற்ற வழக்கு வாகனங்களை அகற்றும் பணி தொடக்கம்

கோடைகால சிறப்பு விளையாட்டுப் பயிற்சி: பள்ளி மாணவா்கள் பங்கேற்கலாம்

SCROLL FOR NEXT