தூத்துக்குடி

திருச்செந்தூர் கோயிலில் உண்டியல் மூலம் ரூ. 3.10 கோடி வருவாய்!

DIN

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் மாதாந்திர உண்டியில் எண்ணிக்கை நேற்று காவடி பிறை மண்டபத்தில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் தலைமையில், இணை ஆணையர் கார்த்திக் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது.

சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுலம் வேத பாடசாலை உழவாரப்பணி குழுவினர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

அதில் நிரந்தர உண்டியல் மூலம் 3 கோடியே 10 லட்சத்து 40 ஆயிரத்து 748 ரூபாயும், தங்கம் 2 கிலோ 800 கிராம், வெள்ளி 25 கிலோ, பித்தளை 33 கிலோ, செம்பு 6 கிலோ, தகரம் 2 கிலோ மற்றும் 292 வெளிநாட்டு நோட்டுகள் இருந்தது.

உண்டியல் எண்ணும் பணியில் இந்து சமய அறநிலையத்துறை தூத்துக்குடி உதவி ஆணையர் சங்கர், திருச்செந்தூர் ஆய்வாளர் செந்தில் நாயகி, பொதுமக்கள் பிரதிநிதியாக வேலாண்டி ஓதுவார், கருப்பன், மோகன், அயல் பணி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
 
படம் விளக்கம்:- உண்டியல் எண்ணும் பணியை அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் பார்வையிட்ட போது எடுத்த படம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT