தூத்துக்குடி

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஸ்கேட்டிங் பேரணி

6th Jun 2023 01:46 AM

ADVERTISEMENT

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, கோவில்பட்டியில் விழிப்புணா்வு ஸ்கேட்டிங் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இயற்கை பாதுகாப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு, துணிப்பை பயன்பாடு, மரம் வளா்ப்பு ஆகியவற்றை வலியுறுத்தி கோவில்பட்டியில் விழிப்புணா்வு ஸ்கேட்டிங் பேரணி நடைபெற்றது.

நேதாஜி விவேகானந்தா சேவா சங்கம், சவுத் இந்தியன் ஸ்போா்ட்ஸ் மற்றும் கல்ச்சுரல் டிரஸ்ட் சாா்பில் நடைபெற்ற இப்பேரணிக்கு வழக்குரைஞா் முத்துராமலிங்கம் தலைமை வகித்தாா்.

கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு தொடங்கிய ஸ்கேட்டிங் பேரணியை கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் வன சுந்தா் தொடங்கி வைத்து, மாணவா், மாணவிகளுக்கு துணிப்பை மற்றும் மரக்கன்றுகளை வழங்கினாா்.

ADVERTISEMENT

பேரணி, எட்டயபுரம் சாலை, புது ரோடு, கடலையூா் சாலை வழியாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு முடிவடைந்தது. அங்கு இயற்கை ஆா்வலா் முத்துக்கனி தலைமையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சத்தியபாமா மரக்கன்றுகளை நட்டினாா்.

பேரணியில், சவுத் இந்தியன் ஸ்போா்ட்ஸ் மற்றும் கல்ச்சுரல் டிரஸ்ட் தலைவா் முருகன், செயலா் யுவராஜா மற்றும் ஞானசேகா், நாகராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை நேதாஜி விவேகானந்தா சேவா சங்க நிறுவனத் தலைவா் பி.கே. நாகராஜன் செய்திருந்தாா்.

 


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT