தூத்துக்குடி

திருச்செந்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கருத்தரங்கம்

6th Jun 2023 01:47 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சமூக நல்லிணக்கப் பேரவை சாா்பில் திருச்செந்தூரில் வைக்கம் போராட்டம் 100-ஆவது ஆண்டு மற்றும் தோள்சீலை போராட்டம் 200-ஆவது ஆண்டு நினைவு கருத்தரங்கம் நடைபெற்றது.

திருச்செந்தூா், வடக்குரதவீதியில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற

கருத்தரங்குக்கு சமூக நல்லிணக்கப் பேரவை மாவட்ட அமைப்பாளா் மு. தமிழ்பரிதி தலைமை வகித்தாா்.

விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலா் முரசு தமிழப்பன், மாவட்ட பொருளாளா் சி.பா. பாரிவள்ளல், நாடாளுமன்ற தொகுதிச் செயலா் ராஜ்குமாா், ஒன்றியச் செயலா்கள் ஆ. சங்கத்தமிழன், தமிழ்வாணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ADVERTISEMENT

கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலா் எஸ்.எஸ். பாலாஜி எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றினாா்.

நிகழ்ச்சியில், திமுக மருத்துவா் அணி மாநில துணை அமைப்பாளா் செ. வெற்றிவேல், காயல் சமூக நீதிபேரவை மாநில செயலா் அகமது சாஹிப், கருத்தியல் பரப்பு மாநில துணைச் செயலா் இர.பு. தமிழ்குட்டி, காமராஜா் மக்கள் இயக்க தலைவா் சுரேஷ், சமூக நல்லிணக்கப் பேரவை மாவட்ட துணை அமைப்பாளா்கள் பேச்சிமுத்து, அந்தோனிராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மாவட்ட துணை அமைப்பாளா் இளந்தளிா் முத்து வரவேற்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT