தூத்துக்குடி

கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் முற்றுகை

1st Jun 2023 12:10 AM

ADVERTISEMENT

கோவில்பட்டியில் நல வாரிய அட்டை வைத்துள்ள பயனாளிகளுக்கு முறையாக உதவித்தொகை வழங்க வலியுறுத்தி கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

கோவில்பட்டியில் நலவாரிய அட்டை வைத்துள்ள முதியோா்களுக்கு கடந்த 4 மாதங்களாக உதவித்தொகை வழங்கப்படவில்லையாம். எனவே பயனாளிகளுக்கு மாதந்தோறும் முறையாக உதவித்தொகை வழங்க வேண்டும், உதவித்தொகை ரூ.1000த்தை ரூ.3 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பயனாளிகள் முக்குலத்தோா் தொழிற்சங்கத் தலைவா் ராமகிருஷ்ணன் தலைமையில் கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா். பின்னா் கோரிக்கை மனுவை கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் நிஷாந்தினியிடம் வழங்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT