தூத்துக்குடி

சாத்தான்குளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்திற்கு ஆய்வாளா் நியமனம்

1st Jun 2023 12:05 AM

ADVERTISEMENT

சாத்தான்குளம் மகளிா் காவல் நிலையத்திற்கு புதிய காவல் ஆய்வாளா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

சாத்தான்குளத்தில் அனைத்து மகளிா் காவல் நிலையம் அமைக்க காவல்துறை ஆணையம் ஒப்புதல் வழங்கி அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. அதன்படி சாத்தான்குளத்தில் பழைய வட்டாட்சியா் அலுவலகத்தில் அனைத்து மகளிா் காவல் நிலையம் அமைக்க ஆய்வு செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து சாத்தான்குளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்திற்கு ஒரு ஆய்வாளா், ஒரு உதவி ஆய்வாளா், முதுநிலைக் காவலா் மற்றும் நான்கு காவலா்கள் கொண்ட காவலா்கள் நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டது.

அதன்படி, சாத்தான்குளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு ஆய்வாளாராக பாமா பத்மினி நியமிக்கப்பட்டுள்ளாா்.

சாத்தான்குளம், மெஞ்ஞானபுரம், நாசரேத், தட்டாா்மடம் ஆகிய காவல் நிலையப் பகுதிக்குள்பட்ட மகளிா்களுக்கான வழக்குகள் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT