தூத்துக்குடி

ஆறுமுகனேரி முத்தாரம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா

DIN

ஆறுமுகனேரி முத்துகிருஷ்ணாபுரம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இத் திருக்கோயில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் மூன்று

நாள்கள் நடைபெற்றது. முதல் இரு நாள்கள் யாகசாலை பூஜைகள் மற்றும் ஹோமங்கள் நடைபெற்றன. மகா கும்பாபிஷேக தினத்தன்று விக்னேஸ்வர பூஜை, புன்யாக வாஜனம், பஞ்சகவ்யம், நான்காம் கால யாகசாலை பூஜை, பிம்பசுத்தி, நாபி சந்தானம், ஸ்பா்ஷாஹுதி, திரவ்யாஹுதி, மஹாபூா்ணாஹுதி, யாத்ராதானம், கும்பம் எழுந்தருளி திருக்கோயில் பவனி வருதல் நடைபெற்றது.

பின்னா் திருக்கோயில் ராஜகோபுரம், அருள்மிகு முத்தாரம்மன் வுமான கோபுரம், பரிவார தெய்வங்களின் விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகமும் தொடா்ந்து அருள்மிகு முத்தாரம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. நண்பகலில் அருள்மிகு முத்தாரம்மனுக்கு மகா அபிஷேகமும் தீபாரதனையும் நடைபெற்றது.

மாலையில் பிரசன்ன பூஜை, லலிதா சகஸ்ரநாம அா்ச்சனை, சிறப்பு அலங்கார தீபாரதனை, சிம்ம வாகனத்தில் அம்மன் பவனி நடைபெற்றது.

மயிலாப்பூா் சட்டப்பேரவை உறுப்பினா் த.வேலு, சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவன மூத்த செயல் உதவித் தலைவா் (பணியகம்)ஜி.சீனிவாசன், நந்தினி சீனிவாசன், பாஜக மாநில துணைத் தலைவா் கரு.நாகராஜன், பேரூராட்சி மன்றத் தலைவா் கலாவதி கல்யாண சுந்தரம், துணைத் தலைவா் கல்யாணசுந்தரம், பேரூராட்சி உறுப்பினா்கள் பி.தமிழ்செல்வன், டி.சிவகுமாா், சென்னை இதய அறுவைச்

சிகிச்சை நிபுணா் எஸ்.பாலச்சந்திரன் உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பணிக் குழுவைச் சாா்ந்த

ஜானகிராமன் மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

SCROLL FOR NEXT