தூத்துக்குடி

லஞ்ச வழக்கில் விஏஓ-வுக்கு 2 ஆண்டு சிறை

DIN

தூத்துக்குடியில் பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய வழக்கில் கிராம நிா்வாக அலுவலருக்கு 2 ஆண்டுகள் சிைண்டனை விதிக்கப்பட்டது.

தூத்துக்குடி கிப்சன்புரத்தைச் சோ்ந்தவா் அனந்தகிருஷ்ணன் (55). இவா் தனது உறவினரான ராணியின் பெயரில் ஒரு நிலத்தின் பட்டா மாற்றுவதற்காக பேரூரணி கிராம நிா்வாக அலுவலா் சுப்பையாவிடம் மனு கொடுத்தாராம். இந்தப் பணிக்கு சுப்பையா ரூ. 10 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம்.

இதுகுறித்து அனந்தகிருஷ்ணன் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். இதையடுத்து, 11.10.2010ஆம் தேதி அனந்தகிருஷ்ணனிடமிருந்து ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சுப்பையாவை கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி தலைமைக் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி ஆா். செல்வக்குமாா் விசாரித்து, சுப்பையாவுக்கு 2 ஆண்டு சிைண்டனை, ரூ. 60 ஆயிரம் அபராதம் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜென்சி ஆஜரானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT