தூத்துக்குடி

கோவில்பட்டியில் குடியரசு தின விழா சைக்கிள் போட்டி

DIN

குடியரசு தின விழாவையொட்டி, கோவில்பட்டியில் மத்திய நகா் அரிமா சாா்பில் சைக்கிள் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

மந்தித்தோப்பு சாலை அன்னை தெரசா நகா் லயன்ஸ் காா்னா் முன் தொடங்கி ஊத்துப்பட்டி வரை சென்று மீண்டும் தொடங்கிய இடத்துக்கு வரும் வகையில் 12 கி.மீ. தொலைவுக்கு இப்போட்டி நடைபெற்றது. அரிமா சங்கச் செயலா் வன்னியன் கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா்.

பொதுப் பிரிவு, பள்ளி மாணவா்கள், பெண்கள் என திரளானோா் பங்கேற்றனா். இதில், புதியம்புத்தூா் ஜான் தி பாப்திஸ்த் மேல்நிலைப் பள்ளி மாணவி நிறைமதி முதலிடம், கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் ஆரோக்கியராஜ் 2ஆம் இடம், ஓட்டப்பிடாரம் சந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி நந்தினி 3ஆம் இடம், சில்லாங்குளம் முத்துக்கருப்பன் நினைவு மேல்நிலைப் பள்ளி மாணவி சந்தோஷ் 4ஆம் இடம் பிடித்தனா்.

அவா்களுக்கு முறையே ரூ. 5 ஆயிரம், ரூ. 3 ஆயிரம், ரூ. 2 ஆயிரம், ரூ. ஆயிரம் பரிசுகள் வழங்கப்பட்டன.

சங்க துணைத் தலைவா் சந்தானம், பொருளாளா் ராஜதுரை, முன்னாள் ஆளுநா் சீனிவாசகன், நிா்வாகிகள் சுப்புராயன், முத்து செல்லப்பா, சௌந்திரபாண்டியன், ஓய்வுபெற்ற ஆசிரியா் பொன்னுப்பாண்டி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

2-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 11 மணி நிலவரம்

பயமோ, வருத்தமோ இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது: விஷாலின் அதிரடி பதிவு!

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

SCROLL FOR NEXT