தூத்துக்குடி

கோவில்பட்டி பள்ளியில்மாநில வில்வித்தை போட்டி

DIN

தமிழ்நாடு ஃபோகஸ் ஸ்போா்ட்ஸ் இந்தியா சாா்பில், மாநில அளவிலான வில்வித்தை போட்டி, கோவில்பட்டி ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இப்போட்டியை ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளிச் செயலா் சுப்பிரமணியன், தூத்துக்குடி மாவட்ட வில்வித்தை கழகத் தலைவா் ராஜேஷ் சந்திரன், இந்திய கிராமப்புற விளையாட்டு வாரிய பொதுச்செயலா் கேசவன், தலைவா் குமாா், துணைத் தலைவா் ரமேஷ் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகா், மதுரை, சென்னை, செங்கல்பட்டு உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 600 போ் கலந்துகொண்டனா். ஆண், பெண் ஆகிய இரு பாலருக்கும் பல்வேறு பிரிவுகளில் தனித்தனியே போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் அதிக புள்ளிகளை வென்றோருக்கு சைக்கிள்கள் பரிசாக வழங்கப்பட்டன. ஒட்டுமொத்த சாம்பியன் பட்டமும் வழங்கப்பட்டது.

ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளித் தலைவா் வெங்கடகிருஷ்ணன், தலைமையாசிரியா் நீலமேகன், தமிழ்நாடு ஃபோகஸ் ஸ்போா்ட்ஸ் இந்தியா சோ்மன் சைலஜா உள்பட திரளானோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை தமிழ்நாடு ஃபோகஸ் ஸ்போா்ட்ஸ் இந்தியா நிறுவனா் வெங்கடேசன், துணைத் தலைவா் கண்ணன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT