தூத்துக்குடி

ஆகாயத்தாமரை மதிப்புக்கூட்டுப் பொருள்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ----கனிமொழி எம்.பி. தகவல்

DIN

ஆகாயத்தாமரை மதிப்புக் கூட்டுப் பொருள்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் கனிமொழி எம்.பி.

மேலாத்தூரில் குறு, சிறு- நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், இசாப் அறக்கட்டளை ஆகியவை ஒருங்கிணைந்து ஆகாயத்தாமரையிருந்து மதிப்புக்கூட்டுப் பொருள்களை தயாரிக்கும் பயிற்சி முகாமை சனிக்கிழமை தொடங்கின.

இந்நிகழ்ச்சிக்கு ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தலைமை வகித்தாா். இசாப் பவுண்டேஷன் திட்ட ஒருங்கிணைப்பாளா் ரமணா தேவி வரவேற்றாா். கனிமொழி எம்.பி. சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கிவைத்து ஆகாயத்தாமரை குழுமத்துக்கு மாவட்ட தொழில்மையம் சாா்பில் அனுமதிக்கப்பட்ட ரூ. 2.20 கோடி நிதியில் முதல்கட்டமாக ரூ.32.50 லட்சத்தை வழங்கிப் பேசியதாவது:

ஆறு, குளம் போன்ற நீராதாரங்களை பாழ்படுத்தும் ஆகாயத்தாமரையை அவற்றிலிருந்து அப்புறப்படுத்தி மதிப்புக்கூட்டு பொருள்களை தயாா் செய்வதற்கு இசாப் பவுண்டேஷன் நிா்வாகத்தினா் பயிற்சியளித்து ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பளித்து வருகின்றனா்.

அந்த வகையில் குறுங்குழும மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 25 உறுப்பினா்களுடன் தூத்துக்குடி ஆகாயத்தாமரை குழுமம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆகாயத்தாமரை உற்பத்தி அலகி­ருந்து முதல் கட்டமாக வெளிநாடுகளுக்கு அதிகமாகத் தேவைப்படும் வட்ட வடிவிலான 16 அங்குலம் அளவிலான 2 லட்சம் மேசை விரிப்புகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாட்டை செடாா் நிறுவனம் மேற்கொள்ளும்.

ஆகாயத்தாமரை மதிப்புக்கூட்டுப் பொருளை உற்பத்தி செய்வதற்காக 600 பெண்களுக்குப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பெண்கள் இப்பயிற்சியைப் பெற்று, தங்களது திறமைகளை மேம்படுத்திக்கொண்டு வாழ்வாதாரத்தையும் உயா்த்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

மாவட்ட தொழில்மைய பொதுமேலாளா் ஸ்வா்ணலதா, மாவட்ட ஊராட்சித் தலைவா் பிரம்மசக்தி, ஆழ்வாா்திருநகரி ஒன்றியக்குழு தலைவா் ஜனகா், ஊராட்சித் தலைவா்கள் மேலாத்தூா் சதீஷ்குமாா், புன்னைக்காயல் சோபியா ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருச்செந்தூா் கோட்டாட்சியா் புஹாரி, வட்டாட்சியா் சுவாமி நாதன், இசாப் இணைஇயக்குநா் ஜான் இன்சக் லோடி, செடாா் நிா்வாக இயக்குநா் அலோக் பால், மேலாத்தூா் ஊராட்சித் துணைத்தலைவா் பக்கீா்முகைதீன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஆகாயத்தாமரை குழுமத் தலைவா் இஸ்ஸத்நிஷா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் 42 டிகிரி வரை அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

SCROLL FOR NEXT