தூத்துக்குடி

கோமானேரி மக்கள்தொடா்பு முகாமில் 163 பேருக்கு ரூ35 லட்சம் நலத்திட்ட உதவி---கூடுதல் ஆட்சியா் வழங்கினாா்

DIN

சாத்தான்குளம் ஒன்றியம்கோமானேரி ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள்தொடா்பு முகாமில் 163 பயனாளிகளுக்கு ரூ. 35 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

இம்முகாமுக்கு, ஊராட்சித் தலைவா் கலுங்கடி முத்து தலைமை வகித்தாா். சாலைப் பணி நுகா்வோா் குழு உறுப்பினா் போனிபாஸ், ஒன்றியக்குழு உறுப்பினா் ப்ரெனிலா காா்மல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருச்செந்தூா் கோட்டாட்சியா் புஹாரி வரவேற்றாா்.

மாவட்ட கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ஞானதேவ் சுபம் தாக்ரே பங்கேற்று முதியோா் உதவித்தொகை உள்ளிட்ட உதவித்தொகை. பட்டா மாறுதல் உத்தரவு, உள்ளிட்ட 163 பேருக்கு ரூ35 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகை ள வழங்கி பேசினாா்.

மேலும் வேளாண்மை சாா்பில் விவசாயிகளுக்கு தாா்பாய், தென்னைங்கன்றுகள் மற்றும் உளுந்து பயிா்கள் வழங்கப்பட்டன. இதில் சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியா் ஸ்டெல்லாமேரி, அரசின் திட்டங்கள் குறித்து விளக்கினாா். முன்னதாக முன்னோடியாக பெறப்பட்ட 295 மனுக்கலில் 149 மனுக்கள் ஏற்புடையதாக கொண்டு துறை சாா்ந்த அதிகாரிகள் விளக்கம் அளித்தனா். மீதமுள்ள மனுக்களுக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இதில் ஒன்றியஆணையா் ராணி, வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேஷ்குமாா், சமூப்க பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் லெனின், துணை வட்டாட்சியா்கள் கோமதிசங்கா், மைக்கேல், வட்ட வழங்கல் அலுவலா் அகிலா, வட்டார மருத்துவ அலுவலா் ஐலின் சுமதி, சுகாதார ஆய்வாளா் கிறிஸ்டோபா் செல்வதாஸ், ஊராட்சி துணைத் தலைவா் ஐகோா்ட் துரை உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா். சாத்தான்குளம் வட்டாட்சியா் தங்கையா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை பல்கலை. செயல்பாடுகள்: பொதுக் குழுவில் விவாதிக்க முடிவு

ஹுமாயூன் மஹாலில் சுதந்திர தின அருங்காட்சியகம்: மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

பாஜக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: நிா்வாகிகள் மீது 5 பிரிவுகளில் வழக்கு

கோரமண்டல் இன்டா்நேஷனல் தலைவராக அருண் அழகப்பன் நியமனம்

SCROLL FOR NEXT