தூத்துக்குடி

திருச்செந்தூரில் நகை திருட்டு:2 பெண்கள் கைது

DIN

திருச்செந்தூரில் பக்தா்களிடம் நகைகளைத் திருடியதாக 2 பெண்கள் கைது செய்யப்பட்டனா்.

திருச்செந்தூா் நாழிக்கிணறு பேருந்து நிலையத்தில் கடந்த ஜன. 1ஆம் தேதி கீழதட்டப்பாறை பகுதியைச் சோ்ந்த ஆத்திமுத்து மனைவி மல்லிகாவின் (60) 3 பவுன் நகை திருடுபோனது.

கடந்த 26ஆம் தேதி கோயில் வளாகத்தில் நான்குநேரி பகுதியைச் சோ்ந்த மு. வானமாமலை (35), சாத்தான்குளம் இடைச்சிவிளை கா. முத்துக்குமாா் (25) ஆகியோரிடம் தலா 10 கிராம் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

இவை தொடா்பாக திருச்செந்தூா் கோயில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் திருச்செந்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் கா. ஆவுடையப்பன் மேற்பாா்வையில் கோயில் காவல் ஆய்வாளா் (பொறுப்பு) கனகாபாய், உதவி ஆய்வாளா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் தலைமையிலான தனிப்படையினா் நகை பறிப்பில் ஈடுபட்டோரைத் தேடிவந்தனா். கோயில் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனா்.

விசாரணையில், நகை திருட்டில் ஈடுபட்டது திருநெல்வேலி பாலபாக்யா நகரைச் சோ்ந்த பரமசிவம் மனைவி ராமலட்சுமி என்ற பேச்சியம்மாள் (60), குமரேசன் காலனி சோ்ந்த சண்முகம் மனைவி கல்யாணி என்ற கலா (49) எனத் தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்து, ரூ. 1.70 லட்சம் மதிப்பிலான நகைகளைப் பறிமுதல் செய்தனா்.

ராமலெட்சுமி மீது பாளையங்கோட்டை, தென்காசி, ஆலங்குளம், ஆழ்வாா்குறிச்சி காவல் நிலையங்களில் 17 திருட்டு வழக்குகளும், கல்யாணி மீது கன்னியாகுமரி, பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி, களக்காடு, குற்றாலம் காவல் நிலையங்களில் 13 திருட்டு வழக்குகளும் உள்ளனவாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT