தூத்துக்குடி

கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

DIN

கோவில்பட்டியையடுத்த இலுப்பையூரணியில் கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இலுப்பையூரணியில் உள்ள மறவா் காலனியில் வசித்து வந்தவா் க. செல்வம் (51). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி பெத்துகனி. செல்வத்தின் மதுப் பழக்கம் காரணமாக தம்பதியிடையே தகராறு ஏற்பட்டதில், கடந்த 4 ஆண்டுகளாக பெத்துகனி அதே பகுதியில் உள்ள கைவண்டி தொழிலாளா் காலனியில் வசித்து வருகிறாராம்.

இந்நிலையில், செல்வம் வெள்ளிக்கிழமை மது குடித்த நிலையில் இருந்ததாகவும், தனது வீட்டின் எதிரேயுள்ள மற்றொரு வீட்டின் குளியலறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.

கிழக்கு காவல் நிலைய போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினா். பெத்துகனி அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT