தூத்துக்குடி

அங்கக வேளாண் விளைபொருள்களுக்கு தரச் சான்று பெற விண்ணப்பிக்கலாம்

30th Sep 2022 12:12 AM

ADVERTISEMENT

அங்கக வேளாண் விளைபொருள்களுக்கு தரச் சான்று பெற விண்ணப்பிக்கலாம் என்றாா் தூத்துக்குடி மாவட்ட விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநா் சு. சுரேஷ்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இயற்கை முறையில் வேளாண்மை செய்வோருக்கும், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட விளைபொருள்களுக்கும் தமிழ்நாடு அரசின் விதைச் சான்று, அங்ககச் சான்று துறையால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தரச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

மத்திய அரசின் வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தால் அளிக்கப்படும் இந்தச் சான்றிதழ் மூலம் அங்கக விளைபொருள்களை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம்.

தற்போது இயற்கை முறையில் விளைபொருள்களை உற்பத்தி செய்யும் அல்லது உற்பத்தி செய்ய விரும்பும் விவசாயிகள் தனியாகவோ, குழுவாகவோ தமிழ்நாடு அரசின் விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று துறையில் உரிய கட்டணம் செலுத்தி பதிவுசெய்து கொள்ளலாம்.

ADVERTISEMENT

மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள உழவா் மையத்தில் இயங்கிவரும் விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநா் அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT