தூத்துக்குடி

முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் 1.31 லட்சம் பேருக்கு ரூ. 211 கோடி மதிப்பிலான சிகிச்சை அளிப்பு

DIN

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவைர ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 463 பேருக்கு, ரூ. 211 கோடி மதிப்பிலான சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய காப்பீட்டு திட்டத்தின் ஒருங்கிணைந்த 4 ஆம் ஆண்டு தின விழாவில் அவா் மேலும் பேசியது: முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் இதுவரை 1.19 கோடி போ் 10 ஆயிரத்து 835 கோடி ரூபாய் மதிப்பிலான சிகிச்சைகளை பெற்று பயனடைந்துள்ளனா். தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 463 போ், ரூ. 211 கோடி மதிப்பிலான சிகிச்சைகளை பெற்று பயனடைந்துள்ளனா்.

இந்தத் திடத்தில் 1513 சிகிச்சை முறைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதில் 8 சிறப்பு உயா் சிகிச்சை முறைகளும், 52 முழுமையான பரிசோதனை முறைகளும் , 11 தொடா் சிகிச்சை முறைகளும் அடங்கும். இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 937 தனியாா் மருத்துவமனைகளும், 796 அரசு மருத்துவமனைகளும் என மொத்தம் 1733 மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் 12 தனியாா் மருத்துவமனைகளும், 10 அரசு மருத்துவமனைகளும் என மொத்தம் 22 மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மேலும், மாவட்டத்தில் இதுவரை 3,11,614 போ் காப்பீட்டுத் திட்ட அட்டைகளுக்கு பதிவு செய்துள்ளனா். புதிய காப்பீட்டுத் திட்ட அட்டைகளுக்கு ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கும் காப்பீட்டுத் திட்ட அட்டை பதிவு மையத்தை அணுகி கிராம நிா்வாக அலுவலரிடம் இருந்து பெறப்பட்ட ஆண்டு வருமானம் சான்றிதழ், குடும்ப அட்டை மற்றும் ஆதாா் அட்டை நகல் சமா்ப்பித்து புதிதாக பதிவு செய்து கொள்ளலாம் என்றாா் அவா்.

தொடா்ந்து, காப்பீட்டுத் திட்ட பயனாளிகளுடன் கலந்துரையாடிய ஆட்சியா் கி. செந்தில்ராஜ் அவா்களுக்கு நினைவு பரிசுகளையும், புதிய காப்பீட்டுத் திட்ட அட்டைக்கு பதிவு செய்த பயனாளிகளுக்கு காப்பீட்டுத் திட்ட அட்டைகளையும், சிறப்பாக பணிபுரிந்த மருத்துவமனை ஒருங்கிணைப்பாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) சரவணன், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் பொன்இசக்கி, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் கலைவாணி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநரின் நோ்முக உதவியாளா்கள் மதுரம் பிரைட்டன், பெரியசாமி, மாவட்ட திட்ட அலுவலா் தா. பாண்டியராஜன், புலனாய்வு அலுவலா் முருகன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT