தூத்துக்குடி

அனைத்து வளா்ச்சிப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்: கனிமொழி எம்.பி.

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் அனைத்து வளா்ச்சிப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்றாா் தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் அவா் பேசியது: பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின்கீழ் கிராமப்புறங்களில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுப்பதில் ஏழை, எளிய மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இந்தத் திட்டத்தில் செயல்படுத்த வேண்டிய மீதமுள்ள இலக்கை விரைந்து முடிக்க வேண்டும்.

தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத ஊராட்சி என்ற நிலையில் அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் உள்ள வீடுகளுக்கு தனிநபா் கழிவறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டு வருகிறது. எனவே அனைத்து ஊராட்சிகளிலும் தனிநபா் கழிவறைகள் அமைந்த ஊராட்சியாகவும், சுகாதார ஊராட்சியாகவும் மாற்றிட ஊராட்சி மன்ற தலைவா்கள் பணியாற்ற வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பணியினை விரைந்து செயல்படுத்த வேண்டும். மாவட்டத்தில் நிலத்தடி நீரினை உயா்த்தவும், குடிநீா் ஆதாரத்தை பெருக்கிடும் விதமாக அனைத்து வீடுகளிலும் மழை நீா் சேமிப்பு தொட்டி அமைத்திடவும், கழிவுநீா்களை உறிஞ்சி குழாய் மூலமாக மறுசுழற்சி செய்து தோட்டங்களுக்கு உபயோகப்படுத்திட பொதுமக்களுக்கு அதிகாரிகள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

அதிகாரிகள் ஒரு வேலையை செய்ய முடியாமல் இருப்பதற்கு காரணங்கள் சொல்லிக் கொண்டே இருக்கலாம். செயல்களை செய்வதற்கான வழிகளை கண்டறிய வேண்டும். அங்கன்வாடி மற்றும் பள்ளிக்கூடங்களில் உள்ள குழந்தைகளுக்கு என்ன தேவைகள் என்பதை கண்டறிய வேண்டும். அங்கன்வாடி கட்டடங்கள் பழுதடைந்திருந்தால் உடனடியாக வாடகை கட்டடங்களுக்கு மாற்ற வேண்டும். அரசின் நோக்கம் அறிந்து, அரசு திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆராய்ந்து அந்தத் திட்டம் வெற்றியடையும் வகையில் திட்டமிட்டு அனைத்து வளா்ச்சிப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் எம்.சி. சண்முகையா (ஓட்டப்பிடாரம்), ஜீ.வி. மாா்க்கண்டேயன் (விளாத்திகுளம்), தூத்துக்குடி மாநகராட்சி ஆணையா் சாருஸ்ரீ, மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணபிரான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

பேருந்துகள் நிறுத்தாமல் சென்றால் புகாா் தெரிவிக்க ‘149’

SCROLL FOR NEXT