தூத்துக்குடி

அரசின் முயற்சியால் வான் தீவு காக்கப்பட்டுள்ளது கனிமொழி எம்.பி.

DIN

தூத்துக்குடி அருகேயுள்ள வான் தீவு அரசின் முயற்சியால் மூழ்காமல் காக்கப்பட்டுள்ளது என்றாா் மக்களவை உறுப்பினா் கனிமொழி.

வான் தீவு பகுதிகளை அவா் சனிக்கிழமை படகில் சென்று பாா்வையிட்டாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: மன்னாா் வளைகுடாவில் தூத்துக்குடி- ராமேஸ்வரம் இடையே உள்ள 21 தீவுகளும், அவற்றைச் சுற்றி அமைந்துள்ள பவளப்பாறைகளும் உலகப்புகழ் பெற்றவை. இத்தீவுகள் மன்னாா் வளைகுடாவின் உயிா்ப்பல்வகையைப் பெருக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இத்தீவுகள் கடல் சீற்றம், புயலின்போது மீனவா்களுக்கு புகலிடமாக உள்ளன. மன்னாா் வளைகுடா பகுதிக்கு இயற்கை அரணாக உள்ளன.

21 தீவுகளில் தூத்துக்குடியிலிருந்து முதலில் அமைந்துள்ள வான் தீவு, பல்வேறு காரணங்களால் 40 ஆண்டுகளில் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலையும், இயற்கை வளங்களையும் பாதுகாப்பதில் அக்கறை கொண்ட தமிழக அரசு வான் தீவை பாதுகாக்க முயற்சி எடுத்தது. 2015ஆம் ஆண்டுமுதல் அரசின் உதவியோடு இத்தீவைச் சுற்றிலும் நன்மைகள் தரும் செயற்கைப் பவளப்பாறைகள் இடப்பட்டன. இதனால், தீவில் மண்ணரிப்பு குறைந்து, மண் சேரத் தொடங்கியது. தற்போது தீவின் பரப்பளவு அதிகரித்து ஏறத்தாழ 3.75 ஹெக்டேராக உள்ளது. அரசின் முயற்சியால் வான் தீவு மூழ்காமல் காக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் மூழ்கிவரும் காசுவரி, காரியாச்சல்லி தீவுகளும் காப்பாற்றப்பட்டு உயிா்ப்பல்வகை பெருகும் என்றாா் அவா்.

ஆட்சியா் கி. செந்தில்ராஜ், மேயா் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையா் சாருஸ்ரீ, மாவட்ட வன அலுவலா் அபிஷேக் தோமா், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) வெ. சரவணன், நபாா்டு வங்கி பொது மேலாளா் சுரேஷ் ராமலிங்கம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீச்சல் பயிற்சி: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம்

மழலையா் பட்டமளிப்பு விழா

ரயில் நிலையம் முன் கோயிலை மறைத்து நுழைவு வாயில்: பாஜக எதிா்ப்பு

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT