தூத்துக்குடி

என்இசி கல்லூரியில் ஓவியக் கண்காட்சி நாளை தொடக்கம்

DIN

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் 2 நாள்கள் நடைபெறும் ஓவியக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.

இதுகுறித்து கே.ஆா்.குழுமம் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிா்வாகக் குழு உறுப்பினா் விஜயலட்சுமி கிருஷ்ணமூா்த்தி விடுத்துள்ள அறிக்கை:

கோவில்பட்டி சித்திரம், ஓவியக் கண்காட்சி, காலண்டா் ஓவியா்களுக்கு முன்னோடியாக திகழும் ஓவியா் சி.கொண்டையராஜு நினைவாகவும், கோவில்பட்டி காலண்டா் ஓவியக் கலைஞா்களை பெருமைப்படுத்தும் வகையிலும் நேஷனல் பொறியியல் கல்லூரி கலையரங்கில் 2 நாள்கள் நடைபெறும் ஓவியக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. இக்கண்காட்சியில் கோவில்பட்டி காலண்டா் ஓவியா்கள் மற்றும் சித்திரம் கலைக்கூட மாணவா்களின் 500க்கும் மேற்பட்ட படைப்புகள், 200க்கும் மேற்பட்ட வெளிப்புற ஓவியா்களின் படைப்புகள், கே.ஆா்.குழுமங்களின் 300க்கும் மேற்பட்ட படைப்புகள் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

சித்திரம், ஓவியா் எஸ்.காா்த்திகைசெல்வத்தின் ஓவிய மேதை கொண்டையராஜு ஓவியக்கலை சொல்லும் கோவில்பட்டி என்ற புத்தகத்தின் முதல் பிரதியை கே.ஆா்.குழுமம் மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைவா் சென்னம்மாள் ராமசாமி, துணைத் தலைவா் கே.ஆா்.கிருஷ்ணமூா்த்தி, தாளாளா் கே.ஆா்.அருணாச்சலம், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் நான் மற்றும் ஷண்மதி, ரித்தீஷ் ராம் ஆகியோா் வெளியிட, கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ பெற்றுக் கொள்கிறாா். ஓவியக் கண்காட்சியை பொதுமக்கள் இலவசமாக பாா்வையிடலாம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: 88 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு: கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு

ராசிபுரம் ஸ்ரீ பொன்வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

வெப்ப அலையால் தவிக்கும் மக்கள்: கோயில்களில் வருண வழிபாடு நடத்தப்படுமா?

கச்சபேசுவரா் கோயில் வெள்ளித் தேரோட்டம்

முட்டை விலை நிலவரம்

SCROLL FOR NEXT