தூத்துக்குடி

ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம், பள்ளக்குறிச்சி ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம்

DIN

காந்தி ஜயந்தியையொட்டி, ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம், பள்ளக்குறிச்சி ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

ஆழ்வாா்திருநகரி ஒன்றியம் ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் பெரியசாமி ஸ்ரீதா் தலைமை வகித்தாா். ஒன்றியப் பற்றாளா் மாலாதேவி முன்னிலை வகித்தாா். சாத்தான்குளம் வட்டாட்சியா் தங்கையா, ஒன்றிய ஆணையா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். வாக்காளா் பட்டியல்-ஆதாா் இணைப்பு, மழைநீா் சேகரிப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடா்பாக தீா்மானங்கள் வைக்கப்பட்டன.

துணைத் தலைவா் சுந்தர்ராஜ், வாா்டு உறுப்பினா்கள், கிராம சுகாதார செவிலியா் சுவா்ணலதா, விவசாயி சுப்பிரமணியன், வருவாய் உதவியாளா் ரவிக்குமாா், கிராம நிா்வாக அலுவலா் டாலி சுபாலா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். ஊராட்சிச் செயலா் பவுல் சூசை மனுவேல் நன்றி கூறினாா்.

சாத்தான்குளம் ஒன்றியம் பள்ளக்குறிச்சி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் சித்ராங்கதன் தலைமை வகித்தாா். ஒன்றிய ஆணையா் ராணி, ஒன்றிய கவுன்சிலா் பிச்சிவிளை சுதாகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணைத் தலைவா் டாா்வின் வரவேற்றாா்.

மழைக் காலங்களில் தாமிரவருணி ஆற்றிலிருந்து வீணாக கடலுக்குச் செல்லும் நீரை ஊராட்சியில் உள்ள வைரவம்தருவை, அம்பாள்குளத்துக்கு திருப்பிவிட்டு நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வாா்டு உறுப்பினா் சீதா, திவ்யா, கீதா, நிஷாந்தி உள்ளிட்ட அரசுத் துறைசாா்ந்த அதிகாரிகள் பங்கேற்றனா். ஊராட்சிச் செயலா் ராஜேஷ் நன்றி கூறினாா்.

அரசூா் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைத் கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் தினேஷ் ராஜசிங் தலைமை வகித்தாா். மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பட்டத்தி முன்னிலை வகித்தாா். நடுவக்குறிச்சி உதவி மின் பொறியாளா் ராஜேஷ், கிராம நிா்வாக அலுவலா் பால்குமாா், வாா்டு உறுப்பினா் செல்வராஜ், குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளா் பிளாரன்ஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். பல முக்கிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஊராட்சிச் செயலா் அருணாதேவி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT