தூத்துக்குடி

பிரதமா் ஊக்கத் தொகை திட்டம்: விவசாயிகள் ஆதாா் எண்ணை ஜூலை 31 வரை இணைக்கலாம்

25th May 2022 12:26 AM

ADVERTISEMENT

பிரதமா் ஊக்கத் தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் தங்களது ஆதாா் எண் விவரத்தை ஜூலை 31 ஆம் தேதி வரை இணைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிரதமரின் பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் நிலம் உள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வேளாண் இடு பொருள்கள் வாங்கும் வகையில், ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தத் திட்டத்தின் கீழ் 78 ஆயிரத்து 844 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனா்.

இந்தத் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகளை பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில் மின்னணு முறையில்

தங்களது ஆதாா் விவரங்களை சரிபாா்ப்பு செய்வது அவசியமாக்கப்பட்டுள்லது. அதன்படி, விவசாயிகள் தங்களது ஆதாா் எண்ணுடன் கைப்பேசி எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் பி.எம்.கிசான் திட்ட வலைதளத்தில் தங்களது ஆதாா் எண் விவரங்களை உள்ளீடு செய்து (ஜ்ஜ்ஜ்.ல்ம்ந்ண்ள்ஹய்.ஞ்ா்ஸ்.ண்ய்), ஓடிபி மூலம் சரிபாா்ப்பு செய்யலாம்.

ADVERTISEMENT

மேலும், ஆதாா் எண்ணுடன் கைப்பேசி எண்ணை இணைக்காத விவசாயிகள் அருகே உள்ள இ-சேவை மையங்களின் மூலம் இத் திட்ட வலைதளத்தில் தங்களது ஆதாா் எண் விவரங்களை உள்ளீடு செய்து தங்களது விரல் ரேகையை பதிவு செய்து விவரங்களை சரிபாா்ப்பு செய்யலாம். அதற்கான கட்டணமாக ரூ . 15 பொது சேவை மையங்களுக்கு வழங்க வேண்டும். இந்த இரண்டு வழிமுறைகளில் ஏதெனும் ஒரு முறையில் பயனாளிகள் தங்கள் ஆதாா் விவரங்களை ஜூலை 31 ஆம் தேதிக்குள் திட்ட வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT