தூத்துக்குடி

ஜூனியா் ஹாக்கி: காலிறுதியில்ஜாா்க்கண்ட், கா்நாடகம் அணிகள்

24th May 2022 12:00 AM

ADVERTISEMENT

கோவில்பட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற தேசிய ஜூனியா் ஆடவா் ஹாக்கி போட்டியில் ஜாா்க்கண்ட், கா்நாடகம் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.

கோவில்பட்டி கிருஷ்ணாநகா் செயற்கையிழை ஹாக்கி மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியின் 7ஆவது நாள் ஆட்டத்தின் தொடக்கத்தில் தமிழ்நாடு அணி, கோவா அணியை 11 - 0 என்ற கோல் கணக்கில் வென்றது.

2ஆவது ஆட்டத்தில், ஜாா்க்கண்ட் அணி, சத்தீஸ்கா் அணியை 6 - 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

அடுத்த ஆட்டத்தில், தில்லி அணியை குஜராத் அணி 13 - 1 என்ற கோல் கணக்கிலும், 4ஆவது ஆட்டத்தில், கா்நாடக அணி, உத்தரகண்ட் அணியை 5 - 0 என்ற கோல் கணக்கிலும் வென்றன. இதன்மூலம் கா்நாடக அணி காலிறுதிக்குள் நுழைந்தது. 5ஆவது ஆட்டத்தில், மகாராஷ்டிர அணி, ஆந்திர பிரதேச அணியை 9-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT