தூத்துக்குடி

ரூ. 30 லட்சத்தில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

DIN

திருச்செந்தூா் பகுதியில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினாா்.

திருச்செந்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மேலதிருச்செந்தூா் ஊராட்சிக்குள்பட்ட கீழநாலுமூலை கிணறு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.20 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் 2 புதிய வகுப்பறை கட்டுவதற்கும், நடுநாலுமூலைகிணற்றில் திருச்செந்தூா் - பரமன்குறிச்சி சாலையில் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் நிழற்குடை அமைப்பதற்கும் தமிழக மீன்வளம் மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினாா்.

பின்னா் மாநில நிதிக் குழு மானிய திட்டத்தின் கீழ் நடுநாலுமூலை கிணற்றில் ரூ.6 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தையும் அமைச்சா் திறந்து வைத்தாா்.

இதில், திருச்செந்தூா் கோட்டாட்சியா் புஹாரி, வட்டாட்சியா் சுவாமிநாதன், திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றிய ஆணையா் பொங்கலரசி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பிரம்மசக்தி, மேல திருச்செந்தூா் ஊராட்சித் தலைவா் மகாராஜா, துணைத் தலைவா் முருகன், பள்ளித் தலைமை ஆசிரியை இந்திராணி,

திமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளா் உமரி சங்கா், மாவட்ட அவைத் தலைவா் அருணாச்சலம், நகா்மன்ற துணைத்தலைவா் ஏ.பி.ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் 42 டிகிரி வரை அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

SCROLL FOR NEXT