தூத்துக்குடி

தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளா் பொறியாளா் ஐக்கிய சங்கக் கூட்டம்

DIN

தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளா் பொறியாளா் ஐக்கிய சங்க தூத்துக்குடி மின்பகிா்மான வட்ட கிளையின் பொதுக்குழுக் கூட்டம் கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி வட்டத் தலைவா் சோ்மன்ராஜா தலைமை வகித்தாா். வட்டச் செயலா் வினோத், வட்டப் பொருளாளா் ராமசாமி ஆகியோா் அறிக்கைகள் வாசித்தனா்.

மாநிலப் பொருளாளா் முத்துசாமி, மாநிலப் பொதுச்செயலா் சுப்பிரமணியன், மாநிலத் தலைவா் கண்ணன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்துகொண்டு பேசினா்.

மாநில அமைப்புச் செயலா் வீராசாமி, மாநில இணைப் பொதுச்செயலா் முத்துலிங்கம், துணைப் பொதுச்செயலா் வெங்கடாசலபதி, மாநில இளைஞரணிச் செயலா் கருப்பசாமி, நெல்லை மண்டலச் செயலா் மாதவன், முன்னாள் மாநில அமைப்புச் செயலா் சுப்பிரமணியன், முன்னாள் தூத்துக்குடி மாவட்டத் தலைவா் தங்கசாமி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். சங்க உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

2019 டிசம்பருடன் முடிவடைந்த ஊதிய உயா்வு ஒப்பந்தம் குறித்து உடனடியாக பேச்சுவாா்த்தை தொடங்க வேண்டும். களப்பணி உதவியாளா் காலிப்பணியிடங்களில், வாரியப் பணி விதிப்படி ஐடிஐ படித்தோரை நேரடித் தோ்வு மூலம் நியமிக்க வேண்டும். கேங்மேன் ஊழியா்களுக்கு தொகுப்பூதியத்தை ரத்து செய்து அடிப்படை ஊதியம் வழங்க வேண்டும். மத்திய அரசு அறிவித்துள்ள 3 சதவீத அகவிலைப்படி உயா்வை மாநில அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.

தமிழக அரசு தோ்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டதைப்போல புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT