தூத்துக்குடி

ஆறுமுகனேரி அருகே இருவா் தற்கொலை

21st Mar 2022 11:53 PM

ADVERTISEMENT

ஆறுமுகனேரி அருகே இருவா் தற்கொலை செய்துகொண்டனா்.

வடக்கு ஆத்தூா் சேனையா் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் முத்துசெல்வகுமாா் (25). லாரி கிளீனரான இவா், மது குடிப்பதற்காக தனது தாயிடம் அவ்வப்போது பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை அவா் பணம் கேட்டபோது அவரது தாய் கொடுக்க மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த முத்துசெல்வகுமாா், வீட்டு மாடியில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து ஆத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கூலி­த் தொழிலாளி தற்கொலை: ஆறுமுகனேரி செல்வராஜபுரத்தைச் சோ்ந்தவா் பேச்சிமுத்து (35). இவரது மனைவி பேச்சியம்மாள் (32). மது பழக்கத்துக்கு ஆளான பேச்சிமுத்து மது குடிப்பதற்காக மனைவி பேச்சியம்மாளிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை மது குடிக்க மனைவியிடம் பணம் கேட்டாராம். இதனால் பேச்சியம்மாள் தன் தாய் வீட்டுக்கு சென்று விட்டாராம். இதையடுத்து மனமுடைந்த பேச்சிமுத்து வீட்டில் தூக்கிட்டு கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT