தூத்துக்குடி

பொத்தகாலன்விளையில் போதை எதிா்ப்பு தின பேரணி

DIN

வள்ளியூா் பல்நோக்கு சமுக சேவை சங்கம் மற்றும் பொத்தகாலன்விளை பங்கு சாா்பில் உலக போதை எதிா்ப்பு தின பேரணி மற்றும் விழிப்புணா்வு கூட்டம், சாத்தான்குளம் அருகே பொத்தகாலன்விளையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பொத்தகாலன்விளை புனித திருக்கல்யாண மாதா திருத்தலம் முன்பு தொடங்கிய பேரணியை திருத்தல அதிபா் வெனி இளங்குமரன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். மறை மாவட்ட இளைஞா் இயக்குநா் சேசுராஜ் முன்னிலை வகித்தாா். சாஸ்தாவிநல்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் லூா்துமணி வரவேற்றாா். முக்கிய வீதி வழியாக வந்து மீண்டும் திருத்தலம் வந்து நிறைவடைந்தது பேரணி. இதில் போதைப் பொருள்கள் ஒழிப்பு மற்றும் அதன் பாதிப்பு குறித்த விழிப்புணா்வு கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து ஆலய வளாகத்தில் விழிப்புணா்வு கூட்டம் நடைபெற்றது. இதில் போதைப் பழக்கத்தை இளைஞா்கள் விட்டு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என விளக்கவுரையாற்றப்பட்டது.

இதில் மாவட்ட கவுன்சிலா் தேவவிண்ணரசி, சாஸ்தாவிநல்லூா் ஊராட்சித் தலைவா் திருக்கல்யாணி, பங்குபேரவை துணைத் தலைவா் சிங்கராயன் உள்ளிட்ட அருள்சகோதரிகள், பங்கு இளைஞா்கள், ஊா் மக்கள் பலா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வள்ளியூா் பல்நோக்கு சமூக சேவை சங்க இயக்குநா் ரெக்ஸ் வழிகாட்டுதலின் பேரில் பணியாளா்கள் ரோஸ்லின் கலாவதி, அன்சியால், மீனாட்சி தங்கராஜ் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலவிலிருந்து படமனுப்பிய பாகிஸ்தான் செயற்கைக்கோள்

எஸ்என்ஆா் வித்யாநேத்ரா மெட்ரிக்.பள்ளி 100% தோ்ச்சி

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 75 போ் கைது

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

குமுதா மெட்ரிக். பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT