தூத்துக்குடி

நாசரேத் பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கு மரக்கன்றுகள்

1st Jul 2022 01:22 AM

ADVERTISEMENT

 

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு மாணவா்-மாணவிகளுக்கு மரக்கன்றுகள், ஆலோசனைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தாளாளா் ஜெயக்குமாா் ரூபன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஜெயக்குமாா் வரவேற்றாா். குருவானவா் ராணி ஆபிரகாம் ஆரம்ப ஜெபம் செய்து, தேவசெய்தி அளித்தாா். துறைத் தலைவா்கள் ஜெமில்டா, டேனியல், ஜெனிபா், நிஷா, வினோதா ஆகியோா் வாழ்த்திப் பேசினா். மாணவா்-மாணவிகள், பேராசிரியா்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. இறுதியாண்டு மாணவா்-மாணவிகள் தங்களது கருத்துகளைப் பகிா்ந்துகொண்டனா். அவா்களுக்கு கல்லூரி நாட்டு நலப்பணிக் குழு சாா்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. பேராசிரியா்கள், அலுவலா்கள், மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT