தூத்துக்குடி

எம்ஜிஆர் பிறந்தநாள்: சாத்தான்குளத்தில் அதிமுகவினர் கொண்டாட்டம்

17th Jan 2022 11:14 AM

ADVERTISEMENT

சாத்தான்குளம்: சாத்தான்குளத்தில் அதிமுக சார்பில் அக்கட்சியின் நிறுவன தலைவரும் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 105-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

சாத்தான்குளம் ஒன்றிய நகர அதிமுக சார்பில் புதிய பஸ் நிலையத்தில் அதிமுக நிறுவன தலைவரும் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 105வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு சாத்தான்குளம் நகர செயலாளர் குமரகுருபரன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் அச்சம்பாடு சவுந்தரபாண்டி முன்னிலை வகித்தார். இதில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய அவைத்தலைவர் பரமசிவ பாண்டியன், மாவட்ட கவுன்சிலர் தேவ விண்ணரசி., ஒன்றிய கவுன்சிலர் செல்வம், ஒன்றிய ஜெயலலிதா பேரவை தலைவர் சின்னதுரை, செயலாளரும் புதுக்குளம் பஞ்சாயத்து தலைவர் பால மேனன், ஒன்றிய துணைச் செயலாளர் சின்னதுரை, ஒன்றிய மாணவரணி செயலாளர் ஸ்டான்லி, முன்னாள் கவுன்சிலர் கார்த்தீஸ்வரன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் பொன் பாண்டி, முன்னாள் விவசாய அணி ஒன்றிய தலைவர் பால் துரை, ஒன்றிய பாசறை செயலாளர் கண்ணன், மற்றும் அதிமுக நிர்வாகிகள் ஜெயசிங், காசிலிங்கம், மருதமலை முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து பெரிய தாழையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு ஒன்றிய செயலாளர் அச்சம்பாடு சவுந்தரபாண்டி தலைமையில் எம்ஜிஆர் சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.இதில் யூனியன் துணைத்தலைவர் அப்பாத்துரை, ஒன்றிய இளைஞரணி செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர். கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

தட்டார் மடத்தில் ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில் இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் எம்ஜிஆர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது .இதையடுத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT