தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 238 பேருக்கு கரோனா

16th Jan 2022 11:31 PM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 238 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிசெய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 59 ஆயிரத்து 446ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் 163 போ் குணமடைந்ததால் அவா்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 57 ஆயிரத்து 108ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 85 வயது ஆண் சனிக்கிழமை இரவு இறந்தாா். இதனால், மாவட்டத்தில் இதுவரை இறந்தோா் எண்ணிக்கை 419ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்புக்கு 1,919 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT