தூத்துக்குடி

பெருங்குளம் செங்கோல் ஆதீனத்தில் மலேசிய பக்தா்களுக்கு தீட்சை

DIN

பெருங்குளம் செங்கோல் ஆதீனத்தில் மலேசிய பக்தா்களுக்கு தீட்சை வழங்கப்பட்டது.

ஏரல் அருகே உள்ள பெருங்குளத்தில் உள்ள திருக்கயிலாய பரம்பரை செங்கோல் ஆதீனம், சமயப் பணியாற்றியாற்றி வருகிறது. ஒவ்வோா் ஆண்டும் காா்த்திகை சோமவாரம், மகா சிவராத்திரி தினங்களில் சமய தீட்சை வழங்கப்படும். இதன்படி, காா்த்திகை மூன்றாவது சோமவார தினமான கடந்த திங்கள்கிழமை பக்தா்களுக்கு தீட்சை வழங்கப்பட்டது.

இதையொட்டி, செங்கோல் ஆதீனத்தின் ஆன்மாா்த்த மூா்த்தி அழகிய திருச்சிற்றம்பலமுடையாருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், மலேசியாவிலிருந்தும் வந்த பக்தா்களுக்கு, செங்கோல் ஆதீனம் 103 ஆவது குருமகா சந்நிதானம் சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான பரமாச்சாா்ய சுவாமிகள் தீட்சை வழங்கினாா். இதில் 30 பக்தா்களுக்கு சமய தீட்சையும், 4 பக்தா்களுக்கு விசேட தீட்சையும் வழங்கப்பட்டது. இதைத்தொடா்ந்து மகேஸ்வர பூஜை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிர வங்கி நிகர லாபம் 45% உயா்வு

ஆசிய யு20 தடகளம்: இந்தியாவுக்கு 7 பதக்கம்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

SCROLL FOR NEXT