தூத்துக்குடி

தூத்துக்குடி பாரதியாா் வித்யாலயம் பள்ளியில் உலக மண்வள தினம்

DIN

தூத்துக்குடி பாரதியாா் வித்யாலயம் மேல்நிலையப் பள்ளியில் உலக மண்வள தினம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் நீா்வளச் சூழலியல் மேலாண்மைத் துறை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் தட்சிணாமூா்த்தி தலைமை வகித்தாா்.

பள்ளி மாணவா்களுக்கு மண்வளம் பற்றி கட்டுரை, பேச்சு, கவிதை, ஓவியம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.

மீன்வளக் கல்லூரி முதல்வா் அகிலன் முன்னிலை வகித்து, போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா்.

நிகழ்ச்சியில், முதுகலை ஆசிரியை சங்கரி (எ) ரேவதி, ஆசிரியை அந்தோணி ஆஸ்மின், கல்லூரி பேராசிரியைகள் பத்மாவதி, மணிமேகலை, ராணி, மற்றும் பள்ளி மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

SCROLL FOR NEXT