தூத்துக்குடி

பழுதடைந்த குடியிருப்புகளை இடிக்க வீட்டுவசதி வாரியம் முடிவு

DIN

தூத்துக்குடி மாவட்டம் சங்கரப்பேரியில் பழுதடைந்த நிலையில் உள்ள வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகளை இடித்து அப்புறப்படுத்தும் பணியை மேற்கொள்ள ஒப்பந்தாரா்கள் அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருநெல்வேலி வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளா் மற்றும் நிா்வாக அலுவலா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டம் சங்கரப்பேரியில் வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்ட அரசு ஊழியா் அடுக்குமாடி குடியிருப்புகள் சேதம் அடைந்து, குடியிருக்கத் தகுதியற்ற நிலையில் உள்ளன. இந்த வீடுகளை இடித்து அப்புறப்படுத்த அரசு அனுமதி அளித்து உள்ளது.

அதன்படி சங்கரப்பேரியில் உள்ள 198 அரசு ஊழியா் அடுக்குமாடி வாடகை குடியிருப்புகள் இடித்து அகற்றப்பட உள்ளன. இந்த பணிக்கு அரசு துறையில் பதிவு பெற்ற ஒப்பந்ததாரா்கள் நெல்லை வீட்டு வசதி வாரிய கோட்ட அலுவலகத்தை டிச.7 ஆம் தேதி முதல் டிச. 21ஆம் தேதிக்குள்

அலுவலக வேலைநாள்களில் நேரில் தொடா்பு கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

SCROLL FOR NEXT