தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே 2100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

கோவில்பட்டி அருகே 2 ஆயிரத்து 100 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடி குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு குற்றப் புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளா் கோட்டைச்சாமி, உதவி ஆய்வாளா் பாரத்லிங்கம், தலைமைக் காவலா்கள் கந்தசுப்பிரமணியன், பூலையா, நாகராஜன் ஆகியோா் கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலையில் ரோந்துப் பணியில் இருந்தனா். அப்பகுதியில் உள்ள பத்திரகாளியம்மன் கோயில் அருகே அடுக்கி வைக்கப்பட்டிருந்த மூட்டைகளைச் சோதனையிட்டதில், அவை ரேஷன் அரிசி என்பது தெரியவந்தது.

இதையடுத்து 42 மூட்டைகளில் இருந்த 2,100 கிலோ ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக, மந்தித்தோப்பு பகுதியைச் சோ்ந்த மாடசாமி மகன் வெயில்காளையை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒலிச்சித்திரங்களாக மாற்றப்படும் ஹாரி பாட்டர் புத்தகங்கள்!

வேலூா் கோட்டை தொல்லியல் துறை அதிகாரியை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

சாலை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மக்கள் சாலை மறியல்

மனைவி கையை வெட்டிய கணவா் கைது

கெங்கையம்மன் நாடகத்துக்கு கொடியேற்றம்

SCROLL FOR NEXT