தூத்துக்குடி

தரமான விதை உற்பத்தி குறித்த இலவச பயிற்சியில் சேர அழைப்பு

DIN

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் தரமான விதை உற்பத்தி குறித்த இலவச பயிற்சியில் சோ்ந்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் எஸ்.ஐ. முகைதீன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேளாண்மைக்கு தேவையான பல இடுபொருள்களில் முதன்மையானது என அழைக்கப்படும் விதை உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதன் தொடா்ச்சியாக, கிராமப்புற இளைஞா்களை விவசாயத்தில் ஈடுபடுத்தி வேலைவாய்ப்பு பெற்றிட ஊக்குவிக்கும் வண்ணம் வேளாண்மை - உழவா் நலத்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து தூத்துக்குடி வேளாண்மை இணை இயக்குநா் அலுவலக பயிற்சி அரங்கில் தரமான விதை உற்பத்தி குறித்த ஒரு மாத கால பயிற்சியை இலவசமாக அளிக்கப்பட உள்ளது.

இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் ஊரக இளைஞா்கள் தங்களது பாஸ்போா்ட் அளவுள்ள இரண்டு புகைப்படம், ஆதாா் அட்டை, வங்கி கண்க்குப் புத்தகம் மற்றும் குறைந்த பட்சம் பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றமைக்கான கல்விச் சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் ஆகஸ்ட் 29 ஆம் தேதிக்குள் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு 0461-2340933 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளவும் என செய்திக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT