தூத்துக்குடி

நடுவக்குறிச்சி துணை மின் நிலையத்தில் புதிய வசதிகள்: காணொலி வாயிலாக திறந்துவைத்தார் முதல்வர்

16th Aug 2022 01:10 PM

ADVERTISEMENT

சாத்தான்குளம்: நடுவக்குறிச்சி துணைமின் நிலையத்தில்  ஒரு கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் நிறைவடைந்த திட்டங்களை காணொலி வாயிலாக முதல்வர் துவக்கி வைத்தார்.
 

தமிழக முதல்வர் அவர்களால் காணொளி காட்சி மூலம் தமிழகம் முழுவதும் ரூ.284.61 கோடி மதிப்பீட்டில் மின் நிலையங்கள் மற்றும் புதிய மின்மாற்றிகள் துவக்க விழா இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள நடுவக்குறிச்சி துனை மின்நிலையத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஒரு கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் நிறைவடைந்த திட்டங்களை காணொளி மூலம் சென்னையில் இருந்து துவக்கி வைத்தார்.

நடுவக்குறிச்சி துணை மின்நிலையத்தில் துணை மின் பொறியாளர் ராஜேஷ் ஏற்பாட்டில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தெற்கு திமுக ஒன்றிய செயலாளர் பாலமுருகன், நடுவக்குறிச்சி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தகுமார், அரசூர் ஊராட்சி தலைவர் தினேஷ் ராஜ சிங், திமுக ஒன்றிய பொருளாளர் ஆனந்த், தாமரைமொழி ஊராட்சி மன்ற தலைவர் சாந்தா, திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் இந்திரகாசி கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில் மின் மாறிய ஊழியர்கள் மற்றும் திமுக கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க: உ.பி. நீதிமன்றத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு: விசாரணைக் கைதி சுட்டுக் கொலை

 

ADVERTISEMENT
ADVERTISEMENT