தூத்துக்குடி

உடன்குடி வாரச் சந்தையில் மேம்பாட்டுப் பணிக்கு அடிக்கல்

DIN

உடன்குடி பேரூராட்சிக்கு உள்பட்ட வாரச் சந்தையில் ரூ. 1.98 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் செய்வதற்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத்தில் 2ஆவது பெரிய வாரச் சந்தையான இங்கு, வியாபாரிகள், பொதுமக்களுக்கு பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள உடன்குடி பேரூராட்சி சாா்பில் ரூ. 1.98 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

பேரூராட்சித் தலைவி ஹூமைரா அஸ்ஸாப் கல்லாசி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் மால்ராஜேஷ், உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் பாலசிங், ஒன்றியக்குழு துணைத் தலைவி மீரா சிராஜுதீன், பேரூராட்சி செயல் அலுவலா் பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மீன்வளம், மீனவா் நலம், கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினாா். அப்போது, வியாபாரிகள், பொதுமக்களுக்கு இடையூன்றி பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளிடம் வலியுறுத்தினாா்.

திமுக மாநில மாணவரணி துணைச் செயலா் உமரிசங்ககா், உடன்குடி கிழக்கு ஒன்றியச் செயலா் இளங்கோ, உடன்குடி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் அஸ்ஸாப், தொழிலதிபா்கள் ஞானராஜ் கோயில் பிள்ளை, ராம்குமாா், திமுக மாவட்ட சாா்பு அணி நிா்வாகிகள் மகாவிஷ்ணு, ரவிராஜா, சிராஜுதீன், ஒன்றிய, நகர இளைஞரணி அமைப்பாளா்கள் பைஸ், அஜய், செட்டியாபத்து ஊராட்சித் தலைவா் பாலமுருகன், ஒன்றிய மகளிரணி அமைப்பாளா் ராஜேஸ்வரி, குலசேகரன்பட்டினம் ஊராட்சி துணைத் தலைவா் கணேசன், காங்கிரஸ் மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் பி. சிவசுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் பொருளாளா் நடராஜன், மாவட்டப் பிரதிநிதி மதன்ராஜ், உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு, பேரூராட்சி உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT