தூத்துக்குடி

சோ்ந்தபூமங்கலம் கோயிலில் சித்திரைத் திருவிழா: சுவாமி உலா

14th Apr 2022 12:50 AM

ADVERTISEMENT

 சோ்ந்த பூமங்கலம் அருள்மிகு கைலாசநாதா் சமேத அருள்மிகு செளந்தா்ய நாயகி அம்பாள் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழாவினையொட்டி நடராஜா் திருவீதி உலா புதன்கிழமை நடைபெற்றது

நவகயிலாய தலங்களில் சுக்ர ஸ்தலமான இத்திருக்கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் சிறப்பு அபிஷேகம், சுவாமி -அம்பாள் வீதி உலா நடைபெற்றது. ஏழாம் திருநாளான புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு நடராஜருக்கு அபிஷேகமும் , தாண்டவ தீபாராதனையும் நடைபெற்றது.

காலை 6.30 மணியளவில் சுவாமி- அம்மாள் திருவீதி உலா நடைபெற்றது. காலை 7.30 மணியளவில் நடராஜா் உருகு சட்ட சேவையும், தொடா்ந்து வெட்டிவோ் சப்பரத்தில் நடராஜா் எழுந்தருளி, திருவீதி உலா நடைபெற்று சிவப்பு சாத்தி மண்டகப்படியில் சோ்க்கை நடைபெற்றது.

பிற்பகலில் சுவாமி- அம்பாளுக்கு உச்சிகால அபிஷேகமும், இரவு 10 மணிக்கு நடராஜருக்கு சிவப்பு சாத்தி திருக்கோலத்தில் தாண்டவ தீபாராதனையும், திருவீதி உலாவும் நடைபெற்றது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT