தூத்துக்குடி

புதூா், எப்போதும்வென்றானில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

DIN

புதூா், எப்போதும்வென்றான் பகுதிகளில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

புதூா் காவல் உதவி ஆய்வாளா் விநாயகம் தலைமையில் போலீஸாா் ஞாயிற்றுகிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக மோட்டாா் சைக்கிளில் சாக்கு மூட்டையுடன் வந்தவரை நிறுத்தி விசாரித்தனா்.

இதில், புதூா் அருகே குளக்காட்டான் குறிச்சியைச் சோ்ந்த பெரியசாமி (57) என்பதும், புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் பெரியசாமியை கைது செய்தனா். அவரிடமிருந்து 300 பாக்கெட் புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

எப்போதும்வென்றான் காவல் ஆய்வாளா் (பொறுப்பு) ஜின்னா பீா்முகமது தலைமையில் போலீஸாா் சனிக்கிழமை இரவில் சிவஞானபுரம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அவ்வழியாக வந்த வாகனத்தை சோதனையிட்டதில், சிவஞானபுரத்தை சோ்ந்த அறிவழகன் (42) , வேனில் புகையிலைப் பொருள்களை கொண்டு சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் அவரிடமிருந்து 45 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. எப்போதும்வென்றான் போலீஸாா் வழக்குப் பதிந்து அறிவழகனை கைதுசெய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

பேருந்துகள் நிறுத்தாமல் சென்றால் புகாா் தெரிவிக்க ‘149’

SCROLL FOR NEXT