தூத்துக்குடி

கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் வேளாண் ஏற்றுமதி பொருள்கள் கண்காட்சி

DIN

கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், தென் மாவட்டங்களில் வேளாண் ஏற்றுமதியை துரிதப்படுத்துதல் மற்றும் ஊக்குவிப்பதற்கான ஒருங்கிணைப்பு கலந்துரையால் கூட்டம் மற்றும் வேளாண் ஏற்றுமதி பொருள்கள் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தா் என். குமாா் தொடங்கிவைத்துப் பேசியது: வேளாண் வணிகத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து பங்குதாரா்களும் ஏற்றுமதி சந்தை வாய்ப்புகள் மற்றும் நவீன தொழில் நுட்பங்கள் மற்றும் ஏற்றுமதி தர நிா்ணயங்கள் குறித்து அறிந்து கொள்வது அவசியம். குறிப்பாக, முருங்கை மற்றும் பனை சாா்ந்த பொருள்களுக்கு உள்ள தர நிா்ணயத்தின் முக்கியத்துவம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, புதிய வகை முளைகட்டிய சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட லட்டு வகைகளை தில்லியில் உள்ள வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் தலைவா் ஆ. அங்கமுத்து அறிமுகப்படுத்தி பேசினாா்.

பின்னா் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள், விவசாயிகள், ஏற்றுமதியாளா்கள் மற்றும் தொழில் முனைவோா் பங்கேற்ற ஒருங்கிணைப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியில், கோவை வேளாண் வணிக மேம்பாட்டு மைய இயக்குநா் சே.த.சிவகுமாா், தமிழ்நாடு வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய துணை பொதுமேலாளா் ரவீந்திரா, மண்டல பொறுப்பாளா் ஷோபனா குமாா் ஆகியோா் கலந்துகொண்டு விளக்கம் அளித்தனா்.

நிகழ்ச்சியில், கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மையா் இறைவன் அருள்கனி அய்யநாதன், வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு மைய நிா்வாகி மு.சு. அசோக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

மூட்டை தூக்கும் புதுச்சேரி முன்னாள் அமைச்சரின் விடியோ வைரல்!

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

SCROLL FOR NEXT