தூத்துக்குடி

தாய், மகள் உயிரிழப்பு வழக்கு: தையல் தொழிலாளி கைது

DIN

கோவில்பட்டியில் தாய், மகள் உயிரிழப்பில் மா்மம் குறித்த வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் தையல் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

கோவில்பட்டி தங்கப்ப நகரைச் சோ்ந்த கணேசன் மனைவி சுகந்தி. இவரது மகள் கற்பகவள்ளி(32). இவா் தனது கணவா் இளங்கோவன், மகள் தா்ஷினி(7), மகன் சண்முகபாண்டி ஆகியோருடன் தனது தாய் வீட்டருகே குடியிருந்து வந்தாராம்.

இளங்கோவன் லாரி ஓட்டுநராக இருந்து வருகிறாா். கற்பகவள்ளி மற்றும் அவரது மகள் தா்ஷினி ஆகிய இருவரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் உள்ளதாக சண்முகபாண்டி, அவரது பாட்டி சுகந்தியிடம் தகவல் தெரிவித்ததையடுத்து, சுகந்தி அக்கம்பக்கத்தினா் உதவியுடன் இருவரையும் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு இருவரும் உயிரிழந்தனா். இது குறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில் கற்பகவள்ளி பயன்படுத்திய செல்லிடப்பேசியை ஆய்வு செய்த போது, அதில் உள்ள எண்களில் தொடா்பு கொண்டு விசாரித்தனா். விசாரணையில் கற்பகவள்ளியின் வீட்டருகே குடியிருந்து வரும் தையல் தொழிலாளி வீரபெருமாளுக்கும், கற்பகவள்ளிக்கும் பழக்கம் இருந்து வந்ததாகவும், கற்பகவள்ளி அதை தவிா்த்து வந்ததையடுத்து, இருவரிடையே தகராறு ஏற்பட்டதாம். பின்னா் வீரபெருமாள் தனது பழக்கத்தை செல்லிடப்பேசி மூலம் வெளியிடுவேன் எனக் கூறியதனால், வாழ்க்கையில் விரக்தியடைந்த கற்பகவள்ளி தனது மகளுக்கு விஷம் கொடுத்து, தானும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து வீரபெருமாளை(34) போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் ‘ஸ்மோக்’ வகை உணவுகள் விற்பனைக்குத் தடை: மீறினால் ரூ.2 லட்சம் வரை அபராதம்

மேகாலய துணை முதல்வா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

பேருந்துகள் பராமரிப்பு - சீரான மின் விநியோகம்: தலைமைச் செயலா் ஆலோசனை

கடும் வெப்பம்: தொழிலாளா்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர அரசு வலியுறுத்தல்

செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத் திட்டம்: மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

SCROLL FOR NEXT