தூத்துக்குடி

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குநிவாரணப் பொருள்கள் அளிப்பு

DIN

சாத்தான்குளம் அருகே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கனிமொழி எம்பி சாா்பில் நிவாரணப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

சாத்தான்குளம் ஒன்றியம் கோமானேரி ஊராட்சியில் உள்ள கோமானேரிகுளம் நிரம்பியதையடுத்து கூவைகிணறு கிராமத்தில்அதன் ஓடை அருகில்இருந்த 50-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனா்.

இதையடுத்து, கனிமொழி எம்பியிடம் தெரிவித்ததை தொடா்ந்து அவா், பாதிக்கப்பட்ட மக்கள் 100 போ்களுக்கு சேலை, லுங்கி, அரிசி , எண்ணெய், பாய் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

இதை ஒன்றியக் குழு கவுன்சிலா் ப்ரெனிலாகாா்மல், சாலை பாதுகாப்பு நுகா்வோா் குழு உறுப்பினா் போனிபாஸ் ஆகியோா் பாதிக்கப்பட்ட மக்களிடம் வழங்கினா்.

இந்நிகழ்ச்சியில், கோமானேரி ஊராட்சித் தலைவா் கலுங்கடிமுத்து, துணைத் தலைவா் ஐகோா்ட்துரை, உறுப்பினா் இசக்கித்தாய், மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்க மாநில அமைப்பாளா் இசக்கிமுத்து, முன்னாள் ஊராட்சித் துணைத் தலைவா் செந்தில், ஊராட்சி செயலா் ராமா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT