தூத்துக்குடி

பிடியாணை பிறப்பிக்கப்பட்டு 2 ஆண்டுகளாகதலைமறைவாக இருந்தவா் கைது

30th Nov 2021 12:25 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி அருகே பிடியாணை பிறப்பிக்கப்பட்டு 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி பாலபாக்கியா நகரைச் சோ்ந்தவா் சங்கா். இவருக்கு சொந்தமான தோட்டம், தூத்துக்குடி அருகேயுள்ள புளியம்பட்டி பகுதியில் உள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் 16 ஆம் தேதி சங்கா் தோட்டத்தில் இருந்தபோது மருதூரைச் சோ்ந்த சந்திரன் என்பவா் தோட்டத்தின் வேலிகளை சேதப்படுத்தி சங்கருக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிந்த புளியம்பட்டி போலீஸாா், சங்கா் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனா். இதுதொடா்பாக வழக்கில் சங்கா் தவிர மற்றவா்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகி வந்த நிலையில், தலைமறைவான சங்கருக்கு பிடியாணை பிறப்பித்து கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டாா்.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் சங்கா் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், புளியம்பட்டி காவல் ஆய்வாளா் தா்மா் தலைமையிலான தனிப்படையினா் அவரை திங்கள்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT