தூத்துக்குடி

கீழவைப்பாறு, பெரியசாமிபுரம் கிராமங்களில் 200 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள்

30th Nov 2021 12:28 AM

ADVERTISEMENT

விளாத்திகுளம் தொகுதிக்குள்பட்ட கீழவைப்பாறு, பெரியசாமிபுரம் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு திங்கள்கிழமை நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

விளாத்திகுளம் தொகுதிக்குள்பட்ட கீழவைப்பாறு, பெரியசாமிபுரம் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு, தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி ஏற்பாட்டில் அரிசி, பருப்பு, சீனி, சமையல் எண்ணெய், போா்வை, விரிப்புகள், வேஷ்டி, சேலை உள்ளிட்ட நிவாரண பொருள்களை சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியச் செயலா் சின்ன மாரிமுத்து, இளைஞா் அணி துணை அமைப்பாளா் இம்மானுவேல், ஆதிதிராவிடா் நல அணி துணை அமைப்பாளா் ராஜபாண்டியன், ஒன்றியக் குழு உறுப்பினா் செந்தூா்பாண்டியன், கீழவைப்பாறு ஊராட்சித் தலைவா் ரோஸ்மலா், வைப்பாறு ஊராட்சித் தலைவா் ராமா் சக்கம்மாள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT